சாதகங்கள்: சூரியன் ஆறில் இருக்கிறார். ஆட்சியில் இருப்பதால் சில வெற்றிகளைத் தருவார். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்ப உறவுகளில் சுமுகம் நிலவும். சிலருக்கு வீட்டில் சுபச் சடங்கு நிகழ்வுகள் உறுதியாகும். அலுவலக வேலைகள் நல்லபடி நடக்கும். தொழில் உற்பத்தி சீராகும். அரசியல் வாதிகளுக்கு ஆதாய சந்திப்பு நிகழும். மாணவர்கள் கல்வியில் தடைகள் நீங்கும். சிலருக்கு தள்ளிப் போன பதவி உயர்வுகள் கிடைக்கும். திறமையும் அதிர்ஷ்டமும் இணையும். இவ்வாரத்தில் நிறைவேறாத ஒரு விஷயம் குறித்து வெளிச்சம் பிறக்கும். அது மனதை உற்சாகப்படுத்தும்.
கவனம் தேவை: அரசாங்கத்தை விரோதித்துக் கொள்ளக்கூடாது. அது சில பிரச்னைகளைத் தரும். புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும். சேமிப்பிலிருந்து மட்டும் செலவு செய்யவும். ஏழில் புதன் சுக்கிரன் சேர்க்கை கெட்ட வழியில் மனதை செலுத்தும். மனக்கட்டுப்பாடு தேவை. சில எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வணங்குங்கள். ஏதேனும் ஒரு ஏழை முதியவருக்கு உங்களால் இயன்ற அளவு பண உதவி செய்ய பற்பல நன்மைகள் பிறக்கும்.