செய்யும் வேலையை மனதிருப்தியுடன் செய்து முடிக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் முக்கிய முடிவுகளை சற்று ஒத்திப் போடுவது நல்லது. நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்திகள் வரவில்லை என்ற கவலை வேண்டாம். கூடிய விரைவில் உங்கள் காதுகளை அது எட்டும். தொழிலைப் பொறுத்தவரை பிரச்சினைகள் வந்தாலும் அது உங்களை பெரிய அளவில் பாதிப்பை உண்டு பண்ணாது. நிறுவனத்தின் புகழ் எட்டுத்திக்கும் பரவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். குடும்பத்தில் தந்தை வழி சார்ந்த பங்காளி உறவு என்ற அமைப்பில் வருபவர்கள் உங்களுக்கு சில நிர்ப்பந்தங்கள் தருவார்கள். கவனமுடன் செயல்படுவதால் சிரமங்களைத் தவிர்க்கலாம். திருமண வயதினருக்கு முயற்சிகள் நல்ல பலனைத்தரும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட விரயமான செலவுகளைப் பற்றி மனதில் எதுவும் எண்ணாமல் நற்பலன்கள் முழுதும் பெற ஆயத்தமாகுங்கள். மாணவர்கள் மனம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
பரிகாரம்: சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வந்தால் தொழில் பிரச்சனைகள் தீரும்.